தமிழக சட்டசபை கூட்டத்தொடர் இன்று காலை தொடங்கிய நிலையில் கேள்வி நேரத்தின் போது அதிமுக எம்எல்ஏ செங்கோட்டையன் ஒரு கேள்வி எழுப்பினார். அதாவது ஈரோடு முதல் கோபிசெட்டிபாளையம் வரை நான்கு வழி சாலைகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. கோபி நகரத்தில் அதிகமாக போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் எங்களுடைய ஆட்சி காலத்தில் புறவழிச்சாலை அமைக்க ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நிதி ஒதுக்கப்பட வேண்டிய நேரத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது.
இது தொடர்பாக அமைச்சரிடம் நான்கு முறை கேட்டுள்ளேன். அதற்காக நான் அந்த பகுதிக்கு வந்துள்ளேன். உடனடியாக செய்ய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று போன நிதியாண்டில் கூறினார். ஆனால் இதுவரை அந்த பணிகள் நிறைவேற்றப்படாத நிலையில் தற்போதாவது அந்த பணிகளை நிறைவேற்ற அரசு முன்வருமா என்று கேட்டார். இதற்கு அமைச்சர் எ.வ. வேலு பதில் வழங்கினார். அவர் பேசும்போது கோபிசெட்டிபாளையத்தில் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இது தொடர்பாக அந்த தொகுதி உறுப்பினரும் கோரிக்கை வைத்துள்ளார். மேலும் இது பற்றி அவருக்கு பிடித்தமான பதிலை மானிய கோரிக்கை விவாதத்தின் போது சொல்லுகிறேன் என்றார்.