அதிமுகவுக்கு ஜெயலலிதா போன்ற சர்வாதிகார தலைவர் வேண்டும்: மருது அழகுராஜ்
WEBDUNIA TAMIL March 17, 2025 05:48 PM

அதிமுகவுக்கு எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற சர்வாதிகார ஜனநாயக தலைவர்தான் வேண்டும், வெறும் ஜனநாயக தலைவர் தேவையில்லை என்று அதிமுக மூத்த தலைவர் மருது அழகராஜ் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுக மூத்த தலைவர் மற்றும் நமது அம்மா நாளிதழின் முன்னாள் ஆசிரியர் மருது அழகராஜ், அதிமுகவுக்கு சர்வாதிகார ஜனநாயகம் தான் பொருந்தும், ஜனநாயகம் பொருந்தாது என்று கூறியுள்ளார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற சர்வாதிகார தலைமை இல்லாததுதான் அதிமுகவில் ஏற்பட்டிருக்கும் பிளவுகளுக்கு காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில், அதிமுகவின் அதிருப்தி தலைவராக மாறியுள்ள செங்கோட்டையனை சமாதானப்படுத்த, தங்கமணி, ஏழுமணி, கே.பி. முனுசாமி, கடம்பூர் ராஜூ ஆகியோர் அவருடன் ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த சில நாட்களாக, எடப்பாடி பழனிச்சாமி மற்றும் செங்கோட்டையன் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, அதிமுக கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்காமல் உள்ளார். இதனால், அவர் கட்சியிலிருந்து வெளியேறி விடுவாரா? அல்லது தனியாக ஒரு கட்சி தொடங்குவாரா? என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

அவரை சமாதானப்படுத்த தீவிர முயற்சிகள் நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், எடப்பாடி பழனிச்சாமியின் தலைமை சர்வாதிகாரம் கொண்டதல்ல என்று மருது அழகராஜ் கூறியது, பல அதிமுக தொண்டர்களும் அதற்கு ஒப்புக்கொண்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.