“நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கண்டிப்பாக ஓவைசியை நாடு கடத்தி விடுவோம்”… பாஜக எம்எல்ஏ பேச்சால் வெடித்த சர்ச்சை…. பரபரப்பில் தெலுங்கானா அரசியல்..!!
SeithiSolai Tamil March 17, 2025 06:48 PM

கடந்த வெள்ளிக்கிழமை அன்று நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்பட்டது. இதற்கிடையில் உத்தரபிரதேசத்தில் உள்ள மசூதிகளில் ஜும்மா தொழுகையை தடுக்க முயன்றதாக பாஜக அரசையும், தலைவர்களையும் AIMIM கட்சி தலைவரும், ஹைதராபாத் என்பியுமான அசாதுதீமன் ஓவைசி குற்றம் சாட்டினார். ஒரு கூட்டத்தில் பேசிய அவர், சிலர் உங்களுக்கு இவ்வளவு பயமாக இருந்தால் நீங்கள் தொழுகை செய்ய வேண்டாம் வீட்டிற்குள்ளே இருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். எங்கள் மசூதிகளை மூடியதை போல, எங்களை நாங்களே மூடிக்கொள்ள வேண்டும் இல்லை என்றால் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்று அவர்கள் கூறுகிறார்கள். பாகிஸ்தானுக்கு குடி பெயர்ந்தவர்கள் கோழைகள், நாங்கள் பயந்து ஓட மாட்டோம், நாங்கள் கோழைகள் அல்ல.

முதலமைச்சர் ஒருவர் ஜும்மா தொழுகையை வீட்டிலும் நிறைவேற்றலாம் என்று கூறினார். நாங்கள் என்ன செய்ய வேண்டும், என்ன செய்யக்கூடாது என்று சொல்ல அவர் யார்?. உத்திரபிரதேசத்தின் வட்ட அதிகாரி அனுஜ் சவுத்ரி ஹோலி வண்ணங்களால் சங்கடப்படுபவர்கள் வீட்டுக்குள்ளே இருக்க வேண்டும் என்று கூறினார். இந்நிலையில் ஓவைசி கருத்துக்கு தெலுங்கானா பாஜகவை சேர்ந்த எம்எல்ஏ ராஜா சிங் ஓவைசி அரசியல் ஆதாயங்களுக்காக அமைதியின்மையை உருவாக்க முயற்சிப்பதாக விமர்சித்தார். மேலும் அவர் கூறியதாவது நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஓவைசி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்றும் தெரிவித்தார். அவருக்கு பைத்தியம் பிடித்துள்ளது. தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி தனது நண்பர்களை மனநல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்ப வேண்டுமென்று கேட்டுக் கொண்டார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.