திருப்பத்தூர் மாவட்டம் சிராவயலை சேர்ந்தவர் திருநாவுக்கரசு. இவரது மகன் கிருஷ்ணகுமார் காரையூர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்த்து வந்தார். கடந்த 13-ஆம் தேதி கிருஷ்ணகுமார் கள ஆய்விற்காக சென்றார். இதனையடுத்து சிங்கம்புணரி சாலையில் இருக்கும் கடையில் தேனீர் குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சாலை கடக்க முயற்சி செய்தார்.
அப்போது அந்த வழியாக வந்த கார் இருசக்கர வாகனம் மீது மோதியது. இதனால் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்த கிருஷ்ணகுமாரை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் கிருஷ்ணகுமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.