தர்மபுரி மாவட்டம் அனுமந்தபுரம் ஊராட்சி செயலாளராக எம்.ஜெயக்குமார் என்பவர் வேலை பார்த்து வந்துள்ளார். இவர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர் என போலி ஜாதி சான்றிதழ் அளித்து வேலையில் சேர்ந்ததாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒருவர் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
அப்போது அதிகாரிகள் ஆய்வின் அடிப்படையிலும், வருவாய் துறை ஆவணங்களின் படியும் ஜெயக்குமார் பட்டியல் இனத்தவர் என உறுதியாகவில்லை. இதனால் காரிமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயக்குமாரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் கெண்டிகான அல்லி ஊராட்சி செயலர் சி.மூர்த்தி அனுமந்தபுரம் ஊராட்சி செயலாளராக (கூடுதல் பொறுப்பு) நியமிக்கப்பட்டார்.