குற்றவாளியை பிடிக்கச் சென்ற காவலர் மயங்கி விழுந்து பலி.. விழுப்புரத்தில் சோகம்.!
Tamilspark Tamil March 17, 2025 08:48 PM


விழுப்புரம் மாவட்டம், கயத்தூர் கிராமத்தில் ரோந்துப் பணியின்போது மயங்கி விழுந்து உயிரிழந்த விக்கிரவாண்டி காவல்நிலைய தலைமைக் காவலரின் குடும்பத்தினருக்கு முதல்வர் ஆறுதல் மற்றும் நிதியுதவி அறிவித்துள்ளார்.

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்துவந்த சீனுவாசன் (வயது 40), நேற்று (16.3.2025) விடியற்காலை சக காவலர் மஞ்சுநாதன் என்பவருடன் தொரவி கிராமத்தில், விக்கிரவாண்டி - புதுச்சேரி மாநில நெடுஞ்சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.

காவலர் பலி

அப்போது, சந்தேகப்படும்படியாக இருச்சக்கர வாகனத்தில் வந்த மூன்று நபர்களில் இரண்டு நபர்களை சக காவலருடன் மடக்கிப்பிடித்து விக்கிரவாண்டி காவல் நிலையத்தில் ஒப்படைத்துள்ளார். பின்னர் தப்பியோடிய மூன்றாவது நபரை பிடிப்பதற்காக கயத்தூர் கிராமத்தில் தேடிவந்து, கயத்தூர் சுடுகாடு அருகே அந்த மூன்றாவது நபரை விரட்டிப் பிடிப்பதற்காக சென்றபோது எதிர்பாராதவிதமாக மயங்கி கீழே விழுந்தார்.

இதையும் படிங்க:

முதல்வர் இரங்கல்

தலைமைக் காவலர் சீனுவாசனை, சககாவலர் உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் தலைமைக் காவலர் சீனுவாசன் உயிரிழந்தார். தலைமைக் காவலர் சீனுவாசனின் அர்பணிப்புடன் கூடிய பணியை பாராட்டியுள்ள தமிழ்நாடு முதல்வர், அவரின் இழப்பால் வாடும் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், ரூ.25 இலட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க:

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.