திக் திக் பயணம்…! கார் ஓட்டும் போது பப்ஜி கேம் விளையாடிய வாலிபர்…. ஷாக்கான பயணிகள்… கொந்தளிப்பை ஏற்படுத்திய வீடியோ…!!
SeithiSolai Tamil March 17, 2025 08:48 PM

ஹைதராபாத் நகரில் ஒரு கார் டிரைவர் பயணிகளை காரில் அழைத்து சென்றார். அப்போது அவர் பப்ஜி கேம் விளையாடிக்கொண்டே காரை ஓட்டிய வீடியோ சமூக வலைதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த டிரைவர் இரண்டு கைகளாலும் செல்போனில் கேம் விளையாடிக்கொண்டே கார் ஓட்டுகிறார். அவ்வபோது ஸ்டியரிங்கை மட்டும் சரி செய்கிறார். பயணிகளுக்காக கூகுள் மேப் வேறொரு செல்போனில் இயக்கப்பட்டுள்ளது.

ஆனால் கேம் விளையாடுவதிலேயே டிரைவர் தனது முழு கவனத்தையும் செலுத்தி இருந்தார். அந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் டிரைவரை கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். பயணிகளின் உயிரோடு டிரைவர் விளையாடுகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். மேலும் சிலர் அவரது ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.