சபாநாயகருக்கு எதிராக சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த தீர்மானம் படுதோல்வி அடைந்தது.
சட்டப்பேரவையின் இன்றைய நிகழ்வில், நேரமில்லா நேரத்தில், சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக சார்பில் அளிக்கப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானம், சட்டப்பேரவையில் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. தீர்மானத்தை விவாதத்திற்கு எடுக்க செங்கோட்டையன், ஓபிஎஸ் மற்றும் அவரது தரப்பு எம்.எல்.ஏக்கள் உள்ளிட்ட 35க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் எழுந்து ஆதரவு தெரிவித்த நிலையில் ஏற்கப்பட்டது.
ஆனால் சபாநாயகர் அப்பாவுக்கு எதிராக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானம் டிவிஷன் முறையில் தோல்வி அடைந்தது. தீர்மானத்துக்கு மொத்தம் 63 பேர் ஆதரவு மற்றும் 154 பேர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருமுறை நடத்தப்பட்ட குரல் வாக்கெடுப்பிலும் தீர்மானம் தோல்வி அடைந்தது குறிப்பிடதக்கது.