ஜியோ, ஏர்டெல் நிறுவனங்களுக்கு பயத்தை காட்டியதா எலான் மஸ்கின் Starlink.. உண்மை என்ன?

இந்தியாவிற்குள் அதிவேக இணைய சேவையை கொண்டுவர ஸ்டார்லிங் செயற்கைகோளுடன் ரிலையன் ஜியோ மற்றும் பார்தி ஏர்டெல் இணைந்துள்ளன. இந்நிலையில் இந்த ஒப்பந்தம் பாரதி மற்றும் ஜியோ ஆகியவை ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் பிராட்பேண்ட் சேவைகளை காஸ்டிலியாக மாற்றுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.ஆனால் அதெல்லாம் இல்லை இந்த ஒப்பந்தம் ஜியோ மற்றும் ஏர்டெல்லின் வணிகங்களுடன் நன்றாக ஒத்துப்போகிறது என்றும் இது யாருக்கும் சேவையில் பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஜேஎம் பைனான்சியல் ஆய்வாளர் கூறியுள்ளார்.ஸ்டார்லிங்க் மற்றும் பிற உலகளாவிய சாட்காம் நிறுவனங்கள், ஹார்டுவேருக்கான ஒரு முறை ஆகும் செலவும் சுமார் 250 டாலர் - 380 அமெரிக்க டாலராக இருக்கும். இது, JM Financial இன் தரவுகளின்படி, இது இந்திய தொலைத்தொடர்பு நிறுவனங்களின் வீட்டு பிராட்பேண்ட் திட்டங்களை விட 7-18 மடங்கு அதிகம், இது மாதத்திற்கு 5-7 டாலரில் இல் தொடங்குகிறது. ஜியோ மற்றும் ஏர்டெல்லின் உயர்நிலைத் திட்டங்கள் மாதத்திற்கு 47 டாலர் வரை செலவாகும், இது 1 Gbps வரை வேகத்தையும் அனைத்து OTT பயன்பாடுகளுக்கான அணுகலையும் வழங்குகிறது எனக் கூறியுள்ளது.கூடுதலாக, ஸ்டார்லிங்க் மற்றும் பிற சாட்காம் நிறுவனங்கள் டேட்டா கேப்கள் ஒரு லிமிடெட் வேகத்துடன்தான் வழங்குகின்றன, அதே நேரத்தில் ஜியோ மற்றும் பாரதி வரம்பற்ற டேட்டா மற்றும் அதிக வேக இணைய சேவையை வழங்குகின்றன. அதனால் இந்த விலை வேறுபாடு இந்தியாவின் உள்ள பயனர்களை கவர்வதில் சற்று சிரமமாக இருக்கும்.ஸ்டார்லிங்கின் செயற்கைக்கோள் இணையம் முக்கியமாக கிராமப்புற மற்றும் தொலைதூரப் பகுதிகளுக்காகவே வடிவமைக்கப்பட்டுள்ளது. எனவே, அறிக்கையின்படி, சேவை கிடைக்காத இடங்களில்கூட அதிவேக இணைய அணுகலை விரைவுபடுத்துவதன் மூலம், பாரதி மற்றும் ஜியோ ஃபைபர் மற்றும் ஏர் ஃபைபர் பிராட்பேண்ட் சேவைகளுடன் போட்டியிடுவதற்குப் பதிலாக, இந்த கூட்டாணி ஒரு நல்ல மூவாக இருக்கும் என நிபுணர்கள் நம்புகின்றனர்.