அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான வழக்கில் ஆளுநருக்கு உச்ச நீதிமன்றம் முக்கிய உத்தரவு பிறப்பித்தது. அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான பணமுறைகேடு குற்றச்சாட்டில் சிபிஐ விசாரணைக்கு தடை கோரிய வழக்கு விசாரணைக்கு வந்தது.
அந்த வழக்கினை விசாரித்த நீதிபதி கோப்புகளை 2 வாரங்களில் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வழங்க தமிழ்நாடு அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தார். மேலும் 2 வாரங்களில் மொழிபெயர்ப்பு கோப்புகளை வழங்கியதும், உடனடியாக ராஜேந்திர பாலாஜி மீதான நடவடிக்கைக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆளுநர் முடிவு எடுக்க வேண்டும் எனவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.