தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் வசித்து வரும் பெண்மணி சுமதி. இவர் நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். இவர் மருத்துவமனைக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்தார்.
அப்போது, திடீரென சுமதிக்கு பேருந்து நிறுத்தத்திலேயே பிரசவ வலி ஏற்பட்டது. இந்நிலையில், அந்த பகுதியில் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் காவல்துறையினர் உதவியுடன் பேருந்து நிலையத்திலேயே ஆண் குழந்தையை பெற்றெடுத்தார்.
தகவலின் பேரில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மூலம் தாய் சேய் இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.