#BREAKING || ஐபிஎல் - ஆன்லைன் மூலமாக டிக்கெட் விற்பனை தேதி அறிவிப்பு..!
Newstm Tamil March 17, 2025 10:48 PM

 'ஐபிஎல் 2025' சீசன் மார்ச் 22ம் தேதி தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மார்ச் 22 அன்று தொடங்கும் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோத உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதல் போட்டியில் மார்ச் 23ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

 

கிரிக்கெட் ரசிகர்கள் சிஎஸ்கே, மும்பை இந்தியன்ஸ் போன்ற அதிகாரப்பூர்வ அணி வலைத்தளங்கள் மற்றும் BookMyShow, Paytm மற்றும் Zomato Insider போன்ற அங்கீகரிக்கப்பட்ட தளங்கள் வழியாக ஐபிஎல் டிக்கெட்டுகளை வாங்க முடியும். மேலும் மைதான கவுண்ட்டர்களில் நேரடியாக சென்றும் டிக்கெட் வாங்கலாம். 

 

இந்நிலையில் வரும் 19ம் தேதி காலை 10.15 மணியளவில் ஆன்லைன் மூலம் டிக்கெட் விற்பனை செய்யப்படும் என அறிவிப்பு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.