வைரலாகும் புரோமோ... நடிகராகும் பிரபல இந்திய கிரிக்கெட் வீரர்!
Dinamaalai March 17, 2025 11:48 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி. இவர் நடிகராக புதிய அவதாரம் எடுத்துள்ளார்.  த பெங்கால் சாப்டர்’  எனும் நெட்ஃப்ளிக்ஸ் வெப் சீரிஸ் ப்ரோமோவில் நடித்துள்ளார். இன்று வெளியான அந்த ப்ரோமோ ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.க்ரைம் த்ரில்லர் போன்ற தீவிரமான இந்த வெப் சீரிஸிற்கு நகைச்சுவையான ப்ரோமோவை கங்குலியை வைத்து உருவாக்கியுள்ளனர்.  

பாலிவுட்டின் பிரபல இயக்குநரான நீரஜ் பாண்டே இந்த வெப் சீரிஸை இயக்கி வருகிறார். 2022ம் ஆண்டு நெட்ஃப்ளிக்ஸில் வெளியான ’காக்கி: த பிஹார் சாப்டர்’  வெப் சீரிஸின் தொடர்ச்சியாக இந்த வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. ‘காக்கி த பெங்கால் சாப்டர்' வெப் சீரிஸ்   மார்ச் 20ம் தேதி நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகிறது. இதற்கான வெளியீட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் கங்குலி நடித்துள்ள இந்த ப்ரோமோ வெளியாகியுள்ளது. இந்த ப்ரோமோவிற்கான படப்பிடிப்பு நடந்தபோதே கங்குலியின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தின. வெப் சீரிஸில் கங்குலி நடிக்கிறாரா? என கேள்விகள் தொடர்ந்த நிலையில் அதற்கான பதில் ப்ரோமோ மூலம் தெளிவாகியுள்ளது.
இந்த ப்ரோமோவில் கங்குலி காக்கி உடையில் காவலராக படப்பிடிப்பு தளத்திற்கு வந்து வங்காளத்தில் வெப் சீரிஸ் எடுக்கிறீர்கள். இந்த தாதாவை கூப்பிடாமல் எப்படி? என காக்கி உடையில் காவலராக நடித்து வருகிறார். அவருக்கு வெப் சீரிஸில் நடிப்பதற்கான ஆடிஷன் நடத்தப்பட்டு வருகிறது.  எல்லா வகையான ஆடிஷன் முடிந்த பிறகு நடிப்பு நமக்கு சரிபட்டு வராது. வெப் சீரிஸிற்கு ப்ரோமோ செய்து கொள்ளலாம் என முடிகிறது. இத்தகைய கலகலப்பான ப்ரோமோ தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகி வருகிறது.


பிஹாரின் பின்தங்கிய மாவட்டங்களில் 2000களின் தொடக்கத்தில் செயல்பட்டு வந்த குற்ற பின்னணி கொண்ட கும்பலை கைது செய்ய போலீஸ் மேற்கொண்ட நிஜ சம்பவங்களை அடிப்படையாக கொண்டிருந்தது.  வெப் சீரிஸ் முதல் சீசன் போலவே கொல்கத்தாவை மையமாக கொண்டு 2000களில் இயங்கிய குற்ற பின்னணி கும்பலின் கதையாக இருக்கும். முதல் சீசனில் இல்லாத புது கதாபாத்திரங்கள் இந்த வெப் சீரிஸை எடுத்துச் செல்கின்றன. கற்பனை செய்ய முடியாத அளவிற்கான குற்ற சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் நடக்கின்றன. அதனை பிரதிபக்லிக்கும் விதமாக இருக்கும் என நீரஜ் பாண்டே தெரிவித்திருந்தார்.


இந்திய கிரிக்கெட் வரலாற்றில் முக்கியமான கேப்டனான சவுரவ் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. இதில் நடிகர் ராஜ்குமார் ராவ் கங்குலி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஆனால் அந்த பயோபிக்கில் கங்குலி நடிக்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.