போதைக்காக கொடூரம்... 2 கிராம் கம்மலுக்காக பெண்ணை கொலை செய்த 2 இளைஞர்கள்!
Dinamaalai March 18, 2025 12:48 AM

தமிழகத்தில் நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம்  அக்ரஹாரம் பகுதியில் வசித்து வந்தவர்   சரஸ்வதி. இவருக்கு வயது 90. இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக மூதாட்டி சரஸ்வதி தனக்கு சொந்தமான அக்ரஹாரம் பகுதியில் உள்ள  வீட்டில்  தனியே வசித்து வந்தார். இந்நிலையில் மார்ச் 15 நேற்று  காலை மூதாட்டி சரஸ்வதி  மூக்கு, காது என பல  இடங்களில் ரத்த  காயங்களுடன்  சடலமாக வீட்டில் கண்டெடுக்கப்பட்டார்.  சரஸ்வதி காதுகள் சேதப்படுத்தபட்டு காதில்  அணிந்திருந்த தங்க தோடு மாயமானது தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளிபாளையம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மூதாட்டி சரஸ்வதி சடலத்தை கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த  அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு, நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது. அப்பகுதியில் சுற்றித் திரியும் 30-க்கும் மேற்பட்ட இளைஞர்களை பிடித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில் அக்ரகாரம் பகுதியில் வசித்து வரும்  விசைத்தறி கூலி தொழிலாளிகள் தாமோதரன் வயது (30), கோகுல்ராஜ் வயது (19) ஆகிய இருவரும்  மூதாட்டி சரஸ்வதியை நீண்ட நாட்களாக நோட்டம் விட்டு வந்துள்ளனர்.  

குடிப்பழக்கம், கஞ்சா பழக்கத்திற்கு அடிமையான இருவரும்  அன்றாட செலவிற்கும், மது குடிப்பதற்கும் மூதாட்டி அணிந்திருக்கும் நகைகளுக்காக அதிகாலை நேரத்தில்  தூங்கும் போது அவர் காதில் உள்ள தோட்டை பறித்துள்ளனர். மூதாட்டி வலியால் துடித்து கத்தவே  மூதாட்டியை முகத்தில்,மார்பு பகுதியில் கண்மூடித்தனமாக தாக்கி கொலை செய்துவிட்டு தப்பி ஓடியது  தெரியவந்தது. இதனையடுத்து அவர்கள் இருவரிடமிருந்து சுமார்  சரஸ்வதியின் தங்கத்தோடு பறிமுதல் செய்யப்பட்டு, இருவரும் கைது செய்யப்பட்டு  சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.