“படிக்க போன பிள்ளையை காணலையே…” பரிதவித்த பெற்றோர்… காதலனின் கொடூர செயல்…. வெளியான திடுக்கிடும் தகவல்கள்…!!
SeithiSolai Tamil March 18, 2025 12:48 AM

திருவண்ணாமலை மாவட்டம் பாடகம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேல்முருகன். இவரது மகள் ரோஷினி கல்லூரி படிப்பை முடித்துவிட்டு போலீஸ் வேலையில் சேர்வதற்காக தனியார் பயிற்சி மையத்தில் படித்து வந்தார். அதே பயிற்சி மையத்தில் அலங்கார மங்கலத்தைச் சேர்ந்த சக்திவேல் என்பவரும் படித்தார். இந்த நிலையில் ரோஷினியும் சக்திவேலும் நட்பாக பழகியுள்ளனர். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு சக்திவேலும், ரோஷினியும் பயிற்சி மையத்தில் இருந்து வீட்டிற்கு நடந்து சென்றனர்.

இந்த நிலையில் பாடகம்- மன்சூராபாத் சாலையில் சென்றபோது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கோபமடைந்த சக்திவேல் ரோஷினியை சரமாரியாக தாக்கி அங்குள்ள கிணற்றில் தள்ளியுள்ளார். இதனையடுத்து நள்ளிரவு நேரம் சக்திவேல் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தார். அப்போது நானும் ரோஷினி என்பவரும் காதலித்து வந்தோம். அவருக்கு திருமணம் செய்ய பெற்றோர் வரன் பார்த்தனர். நான் ரோஷினியிடம் திருமணம் செய்து கொள்ளலாம் என கூறினேன். ரோஷினி அதற்கு மறுப்பு தெரிவித்தார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் நான் ரோஷினியின் கன்னத்தில் அறைந்தேன். உடனே ரோஷினி அருகில் இருக்கும் கிணற்றில் குதித்து விட்டார் என கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த போலீசார் அந்த கிணற்றுக்கு சென்று பார்த்த போது ரோஷினியின் சடலம் மிதந்தது. அவரது தலையில் காயம் இருந்ததால் போலீசார் சக்திவேலிடம் விசாரணை நடத்தினர். அப்போது கோபத்தில் ரோஷினியின் கழுத்தை நெரித்து கொலை செய்துவிட்டு சடலத்தை கிணற்றில் வீசியதை சக்திவேல் ஒப்புக்கொண்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் சக்திவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.