திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் உள்ள அரசு பள்ளி ஒன்றில் 8ம் வகுப்பு படித்து வந்த மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த உடற்கல்வி ஆசிரியரை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.
நெல்லை மாவட்டம் களக்காடு அருகே உள்ள மாவடிபுதூரைச் சேர்ந்தவர் மோகன் (54). இவர் களக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். இவர் அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவரை உடற்கல்வி அறைக்கு தனியாக வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது.
பின்னர் ஆசிரியரின் பேச்சு அடிபணிந்து அங்கு சென்ற மாணவிக்கு மோகன் பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவி, அங்கிருந்து அலறியபடியே வெளியே ஓடி வந்துள்ளார். பின்னர் வீட்டுக்கு சென்ற மாணவி இது குறித்து தனது தாயாரிடம் தெரிவித்தார்.
இது தொடர்பாக மாணவியின் தாயார் நாங்குநேரி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் மோகனை கைது செய்தனர்.