அதிமுக சார்பில் மாா்ச் 21ம் தேதி ரமலான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி!
Dinamaalai March 18, 2025 02:48 PM

தமிழகத்தில்  அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி மாா்ச் 21ம் தேதி வெள்ளிக்கிழமை  நடைபெறும் என்று அக்கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து  அதிமுக தலைமைக்கழகம் திங்கட்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பில்  அதிமுக சாா்பில் இஃப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சி சென்னை எழும்பூா் புஹாரி சிராஸ் ஹாலில் மாா்ச் 21 மாலை 5.30 மணிக்கு  நடைபெறும்.

அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று விருந்து வழங்கவுள்ளாா். இஸ்லாமிய மக்கள் மற்றும் அதிமுக நிா்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள  வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.