தமிழகத்தில் நேற்று பாஜக கட்சியின் சார்பில் டாஸ்மாக் ஊழலுக்கு கண்டனம் தெரிவித்து போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் ஈடுபட்ட பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, எச் ராஜா, தமிழிசை சௌந்தர்ராஜன் மற்றும் வானதி சீனிவாசன் உட்பட பாஜகவினரை போலீசார் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்தனர். நேற்று மாலை 6 மணி ஆகியும் போலீசார் அவர்களை விடுவிக்காததால் அண்ணாமலை மற்றும் தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்ட தலைவர்கள் போலீசாருடன் கடுமையாக வாக்குவாதம் செய்தனர்.
இந்நிலையில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்ட அண்ணாமலை, தமிழிசை சௌந்தரராஜன் மற்றும் எச் ராஜா உட்பட பாஜகவின் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அண்ணாமலை தமிழிசை உட்பட மொத்தம் 1078 பாஜகவினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.