எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 3 மீனவர்கள் கைது!
Top Tamil News March 18, 2025 03:48 PM

கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் மூன்று பேர் மற்றும் அவர்களது படகுகளையும் இலங்கை கடற்படை சிறை பிடித்தது.


கச்சத்தீவு அருகே மீன்பிடித்து கொண்டிருந்த ராமேஸ்வரம் மீனவர்கள் சிறைபிடிக்கப்பட்டுள்ளனர். எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 3 பேரை சிறைபிடித்தது இலங்கை கடற்படை. நடுக்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது விசைப்படகுடன் 3 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இலங்கை கடற்படையினரின் தொடர் அட்டூழியத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.