ராணிப்பேட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 9 வயது சிறுமி அப்பகுதியில் இருக்கும் பள்ளியில் நான்காம் வகுப்பு படிக்கிறார். நேற்று சிறுமி பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்து விளையாடிக் கொண்டிருந்தார். அப்போது உறவுமுறை அண்ணனான 17 வயது சிறுவன், 14 வயது சிறுவன், சக்கரவர்த்தி முனுசாமி ஆகியோர் சிறுமிக்கு கூட்டாக பாலியல் தொந்தரவு அளித்துள்ளனர். இதுகுறித்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் ராணிப்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்த போலீசார் சக்கரவர்த்தி, முனுசாமி உள்பட நான்கு பேரையும் அதிரடியாக கைது செய்தனர். இதனையடுத்து நான்கு பேரையும் போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.