வேலூர் மாவட்டம் ஏலகிரி மலைக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பகுதி சேர்ந்தவர் காமாட்சி. இவர் கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை விட்டு பிரிந்து வாழ்கிறார். இந்த நிலையில் காமாட்சிக்கும் ஜெயராமன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இதுகுறித்து அறிந்த காமாட்சியின் அக்கா தனது தங்கையையும், ஜெயராமையும் கண்டித்துள்ளார். இருவரும் அடிக்கடி ஏலகிரி மலை பகுதிக்கு சென்று ரெசார்ட்டில் அறை எடுத்து தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இந்த முறையும் காமாட்சியும் ஜெயராமனும் வீட்டை விட்டு வெளியேறி அந்த ரெசார்டில் தனிமையில் இருந்தனர். அதன் பிறகு தங்களது கள்ளக்காதலனுக்கு வீட்டில் எதிர்ப்பு கிளம்பியதால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றனர். இதில் ஜெயராம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உயிருக்கு போராடிய காமாட்சியை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு ஜெயராமின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.