2021 ஆம் வருடம் தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணியானது 1-3 என்ற கணக்கில் தோல்வியடைந்தது. இதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய விதிமுறைகளை அமல்படுத்தியது. அதில் முக்கியமாக கிரிக்கெட் வீரர்களுடைய குடும்பத்தினர் 45 நாட்களுக்கு மேல் நீடிக்கும் சுற்று பயணங்களின் போது மட்டுமே அவர்களோடு தங்க அனுமதிக்கப்படுவார்கள். இந்த கால அவகாசம் 14 நாட்களுக்கு மட்டுமே நீடிக்கும் என்றும் கூறப்பட்டது.
இந்நிலையில் இந்த விதிமுறை குறித்து இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி கூறியுள்ளதாவது, வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது கிரிக்கெட் போட்டியில் சிறப்பாக செயல்படாத சமயத்தில் அறைக்கு சென்று தனியாக சோகத்தோடு உட்கார விரும்பவில்லை. அழுத்தமான சூழலில் குடும்பத்தோடு இருக்கும்போது அத்தகைய ஏமாற்றத்தில் இருந்து சீக்கிரம் வெளியே வர முடியும் என்று கூறியுள்ளார். மேலும் கிரிக்கெட் வீரர்களோடு அவர்கள் குடும்பத்தினர் தங்கி இருப்பதன் மூலமாக கிடைக்கும் மதிப்பை பலரும் புரிந்து கொள்ள மாட்டார்கள் என்றும் கருத்து தெரிவித்துள்ளார்.