பாஸ்போர்ட் என்பது ஒரு அரசாங்கத்தால் வழங்கப்படும் அதிகாரப்பூர்வ பயண ஆவணம். இது சர்வதேச பயணத்திற்கான ஒரு நபருடைய அடையாளம் மற்றும் தேசியத்தை சரி பார்த்து அவர்களுக்கு ஒரு நாட்டிற்குள் நுழையவும், வெளியேறவும் அனுமதி அளிக்கிறது. அந்த வகையில் இந்தியாவில் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினர் தொடர்பான விவரங்களை கையாள்வதற்கு பாஸ்போர்ட் சட்டம், வெளிநாட்டில் பதிவு சட்டம் உட்பட நான்கு சட்டங்கள் நடைமுறையில் உள்ளது. இந்த நான்கு சட்டத்திற்கு பதிலாக குடியேற்றம் மற்றும் வெளிநாட்டினார் மசோதா 2025 என்ற புதிய மசோதாவை மத்திய உள்துறை அமைச்சர் ஆனது உருவாக்கி இருக்கிறது.
இந்த நிலையில் இந்த புதிய மசோதாவின் முக்கிய விதிமுறை குறித்து தகவல் ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது இந்தியாவில் நுழைவதற்கோ தங்குவதற்கோ அல்லது வெளியேறவோ போலி பாஸ்போர்ட் விசா பயன்படுத்தினால் ஏழு வருடங்கள் சிறைத் தண்டனை மற்றும் 10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்று புதிய குடியேற்ற மசோதாவில் கூறப்பட்டுள்ளது . மேலும் சரியான பாஸ்போர்ட் மற்றும் விசா உள்ளிட்ட பயண ஆவணங்கள் எதுவும் இல்லாமல் இந்தியாவில் வெளிநாட்டினர் நுழைந்தால் ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் 5 லட்சம் அபராதமும் அல்லது இரண்டு தண்டனைகளும் சேர்த்து விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.