இரவுபகல் பார்க்காம குடும்பத்திற்காக உழைக்கும் மாணவன்…. திடீர் சர்பிரைஸ் கொடுத்த KPY பாலா… வைரலாகும் வீடியோ..!!
SeithiSolai Tamil March 18, 2025 05:48 PM

பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டதன் மூலம் மிகவும் பிரபலமானவர் கேபிஒய் பாலா. இவர் வெள்ளித்திரையில் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதையே தன்னுடைய முழு நேர வேலையாக வைத்துள்ளார். அவர் மற்றவர்களுக்கு உதவி செய்வதை ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட பிரபலங்கள் பாராட்டியுள்ளனர். இவர் ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் செய்து வருகிறார். ஆனால் மறுபக்கம் பல விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

இருந்தாலும் அதையெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு அவருடைய சேவை தொடர்ந்து வருகிறது. மலை வாழ் கிராமங்களை சேர்ந்த மக்களுக்கு இதுவரை 6 ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்துள்ளார். மேலும் கஷ்டப்பட்ட மாணவிகளுக்கு படிப்புக்கான சிறு சிறு உதவிகளும் செய்து வருகிறார். இந்நிலையில் இரவு பகல் பாராது தனது குடும்பத்திற்காக வேலை செய்யும் ஒரு மாணவன் தினமும் தனது வீட்டிலிருந்து சைக்கிளில் செல்கிறார். இதை கேள்விப்பட்ட KPY பாலா அவருக்கு பைக் வாங்கி கொடுத்து சர்பிரைஸ் கொடுத்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

 

View this post on Instagram

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.