1990-களில் பாலிவுட்டில் பல வதந்திகள் பரவி வந்தன. அதில் மிகப்பெரிய சர்ச்சையாகும் மனிஷா கொய்ராலா, ராஜீவ் முல்சந்தானி, மற்றும் ஐஸ்வர்யா ராய் ஆகியோருக்கிடையேயான காதல் முக்கோணக் குழப்பம். இந்த சர்ச்சை, மனிஷா தனது காதலன் ராஜீவ், ஐஸ்வர்யாவுடன் தொடர்பில் இருந்ததாக குற்றச்சாட்டை எழுப்பியபோது உருவாகியது. மேலும், அவரது வசம் ராஜீவ், ஐஸ்வர்யாவிற்கு எழுதியதாகக் கூறப்பட்ட காதல் கடிதங்கள் இருந்ததாகவும் செய்திகள் வெளிவந்தன. ஆனால், இந்த குற்றச்சாட்டுகளை ஐஸ்வர்யா ராய் மறுத்ததோடு, இந்த செய்தி தன்னை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாகவும் கூறினார்.அக்
இது குறித்து ஒரு பழைய பேட்டியில் ஐஸ்வர்யா ராய், மனிஷாவின் நடிப்பை பாராட்ட விரும்பியதாக தெரிவித்துள்ளார். 1995ஆம் ஆண்டு வெளியான ‘Bombay’ திரைப்படத்தில் மனிஷா கொய்ராலாவின் நடிப்பை பாராட்ட, அவருக்கு பூஞ்செண்டு அனுப்பும் திட்டத்தில் இருந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஏப்ரல் 1ஆம் தேதி, ராஜீவ் தன்னை அழைத்தபோது, அவரிடம் மனிஷாவின் குற்றச்சாட்டுகள் குறித்து கேள்விப்பட்டதாகவும், அதனால் மிகுந்த அதிர்ச்சி அடைந்ததாகவும் கூறினார். “என்னால் இதை நம்பவே முடியவில்லை! இது எனக்கு மிகுந்த அதிர்ச்சியாக இருந்தது” என்று அந்த நேரத்தில் உணர்ந்ததை பகிர்ந்துள்ளார்.
இந்த சர்ச்சை தன்னை மிகுந்த துன்பத்திற்கு உள்ளாக்கியதாக ஐஸ்வர்யா ராய் பின்னர் கூறினார். “மனிஷாவின் இந்த குற்றச்சாட்டு என் மனதை முற்றிலும் பாதித்தது. ஆரம்பத்தில், நான் அடிக்கடி அழுதேன், நான் மிகவும் கவலையில் ஆழ்ந்திருந்தேன்” என்று அவர் தெரிவித்தார். மேலும், இந்த குற்றச்சாட்டுகள் உண்மையாக இருந்தால், ஏன் இது 1994-ல் வெளியிடப்படவில்லை? என ஐஸ்வர்யா கேள்வி எழுப்பினார். “மனிஷாவின் காதல் முறிவுக்கான காரணம் இது என்றால், ஏன் அதற்குப் பிறகு ஒன்பது மாதங்கள் கழித்து இந்த தகவல் வெளியாகியது?” என்று விளக்கமளித்தார்.