வாவ்..! குட் பேட் அக்லி படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்திருக்கும் மிக முக்கிய ஸ்டார்..? குஷியில் ரசிகர்கள்..!!
SeithiSolai Tamil March 18, 2025 05:48 PM

நடிகர் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படம் தயாராகி வருகிறது. இந்த படத்தில் அஜித்துடன் த்ரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன்தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்த படத்தை தயாரிக்கிறது. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரலாகியது.

கடந்த 28ஆம் தேதி படத்தின் டீசர் வெளியானது. இதனை தொடர்ந்து இந்த மாதத்தின் இறுதியில் படத்தின் டிரைலர் வெளியாக உள்ளது. மேலும் புக்கிங் இந்த மாதம் இறுதியில் தொடங்கும் என்று கூறப்படுகிறது. ஏப்ரல் பத்தாம் தேதி வெளிவர உள்ள இந்த படத்தை தமிழ்நாட்டில் ஒன்பதாம் தேதி பிரீமியர் பண்ண போவதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் சிம்பு ஒரு கெஸ்ட் ரோலில் நடித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய அன்பானவன் அசராதவன் அடங்காதவன் என்ற படத்தில் சிம்பு நடித்திருந்தார். தற்போது இந்த படத்திலும் நடித்துள்ளதாக கூறப்படுகிறது என்றும் கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.