“1 இல்ல 2 இல்ல மொத்தம் 20 வருஷம்”… அதுவும் காலேஜில் வைத்தே… 59 மாணவிகளுடன்… பேராசிரியரின் கீழ்த்தரமான செயல்… வெளிவரும் பகீர் தகவல்கள்.!!
SeithiSolai Tamil March 18, 2025 06:48 PM

உத்தரப்பிரதேச மாநிலத்தின் ஹத்ராஸ் மாவட்டத்தில் உள்ள சேத் பூல் சந்த் பாக்லா முதுகலை அரசுக் கல்லூரியின் புவியியல் துறை தலைவர் ரஜ்னீஷ் குமார் (59) மீது மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்தது தொடர்பாக பெரும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக மாணவிகளை மிரட்டியும், பரீட்சையில் நல்ல மதிப்பெண் தருவதாகக் கூறியும், வேலை வாய்ப்பு பெற உதவுவதாகக் கூறியும் அவர் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாமல், அந்த சம்பவங்களை வீடியோ பதிவு செய்து வைத்திருந்ததும், மாணவிகள் புகார் அளிக்க பயந்ததும் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

பாலியல் புகார்கள் மற்றும் நிர்வாகத்தின் மறுப்பு

மாணவிகள் பலமுறை கல்லூரி நிர்வாகத்திடம் புகார் அளித்தாலும், நிர்வாகம் இதை உதாசீனம் செய்ததோடு, ரஜ்னீஷ் குமார் குற்றமற்றவர் என அறிவித்துவிட்டது. இதனால், பாதிக்கப்பட்ட சில மாணவிகள் தேசிய மகளிர் ஆணையம் (NCW) மற்றும் உயர் போலீஸ் அதிகாரிகளிடம் புகார் அளிக்கத் தீர்மானித்தனர். கடந்த ஆண்டு அளிக்கப்பட்ட புகாரில், பேராசிரியர் ரஜ்னீஷ் குமார் மாணவிகளுடன் ஆபாசமான முறையில் இருப்பதை உறுதிப்படுத்தும் புகைப்படங்கள் மற்றும் 59 வீடியோக்கள் ஆதாரமாக சமர்ப்பிக்கப்பட்டன. விசாரணை தொடங்கிய நிலையில், மார்ச் 13 அன்று அவருக்கு எதிராக பாரதிய நியாயச் சன்ஹிதா (BNS) பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

தலைமறைவான பேராசிரியர்: போலீசார் தேடல் தீவிரம்

வழக்கு பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த சனிக்கிழமை அவர் பணிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால், போலீசார் கைது செய்ய முயன்றதுடன் அவர் தலைமறைவாகிவிட்டார். ஹத்ராஸ் மாவட்ட எஸ்பி சிரஞ்சீவி நாத் சின்ஹா தெரிவித்ததாவது, “ரஜ்னீஷ் குமார் தனது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்து, மாணவிகளை பல்வேறு விதங்களில் அச்சுறுத்தி வந்துள்ளார். அவரை பிடிக்க தொடர்ந்து தேடுதல் வேட்டை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், கல்லூரி நிர்வாகம் ஒத்துழைக்க மறுப்பதால், மாணவிகளை அடையாளம் காணும் பணியில் தடைகள் ஏற்பட்டு வருகின்றன.” அவரை விரைவில் கைது செய்ய காவல்துறை தீவிர நடவடிக்கையில் இறங்கியுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளில் ஒருவர் தேசிய மகளிர் ஆணையத்திற்கு எழுதிய கடிதத்தில் அந்த பேராசிரியரால் நான் சாகும் அளவுக்கு தள்ளப்பட்டேன். இது பற்றி கல்லூரி நிர்வாகம் பலமுறை புகார் கொடுத்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. தயவுசெய்து மற்ற மாணவிகளையாவது காப்பாற்றுங்கள் என்று எழுதியுள்ளதோடு அவர் 12 மாணவிகளுடன் காலேஜில் வைத்து அத்துமீறும் புகைப்படங்களையும் அனுப்பியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.