கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டத்தில் நடந்த ஒரு சம்பவம் மிகவும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது. அதாவது இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய ஒரு சிறுமிக்கு பல வருடங்களாக போதை மருந்து கொடுத்து வாலிபர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். கடந்த 2020 ஆம் ஆண்டு அந்த சிறுமி 11ஆம் வகுப்பு படித்தபோது 23 வயதான அப்துல் கபூர் என்பவர் இன்ஸ்டாகிராம் மூலமாக அந்த சிறுமியுடன் பழக ஆரம்பித்தார். தன்னை ஒரு பணக்காரராக காட்டி பெரிய பங்களா வீடுகள் இருப்பது போன்ற புகைப்படங்களை சிறுமிக்கு வாலிபர் அனுப்பியுள்ளார். இதை நம்பிய சிறுமியும் அந்த வாலிபருடன் பேச ஆரம்பித்த நிலையில் பின்னர் இருவரும் நேரில் சந்திக்க ஆரம்பித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து சாப்பிடும் போது உணவில் போதை மருந்து கலந்து சிறுமிக்கு வாலிபர் கொடுத்துள்ளார். அப்போது சிறுமி மயக்க நிலையில் இருக்கும்போது அதை பயன்படுத்தி வாலிபர் பலாத்காரம் செய்தார். கிட்டத்தட்ட 5 வருடங்களுக்கும் மேலாக இந்த கொடூர சம்பவம் நீடித்த நிலையில் தற்போது தான் இது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது சிறுமியின் உடல் நிலை மோசமாகவே பெற்றோர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அதோடு மனநல ஆலோசனையும் வழங்கப்பட்டது. அப்போதுதான் சிறுமிக்கு நேர்ந்த கொடுமைகள் பற்றி தெரிய வந்த நிலையில் அப்துல் கஃபூர் மீது காவல் நிலையத்தில் பெற்றோர் புகார் கொடுத்தனர்.
அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வாலிபரை கைது செய்த நிலையில் அவரிடம் சிறுமியின் ஆபாச புகைப்படங்கள் இருப்பது தெரியவந்த நிலையில் சிறுமியின் நகைகளையும் மோசடி செய்ததற்கான ஆதாரங்களும் கிடைத்துள்ளது. அதோடு போதைப் பொருள் வழக்கிலும் அந்த வாலிபருக்கு தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் அவரை நீதிமன்ற காவலில் எடுத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.