தொழுகை முடிந்து வீடு திரும்பி கொண்டிருந்த காவல் உதவி ஆய்வாளர் வெட்டிக்கொலை! நெல்லையில் பரபரப்பு
Top Tamil News March 18, 2025 07:48 PM

நெல்லை மாநகரில் வசித்துவந்த ஓய்வுபெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாகீர் உசேன் பிஜில் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை டவுண் காட்சி மண்டபம் அருகே ஓய்வு பெற்ற காவல் உதவி ஆய்வாளர் ஜாஹீர் உசேன் வெட்டிக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிகாலையில் தொழுகை முடிந்து, வீடு திரும்பியபோது ஜாஹீர் உசேனை மர்மநபர்கள் வழிமறித்து வெட்டிவிட்டு தப்பினர். ஜாஹீர் உசேனின்  உடலை கைப்பற்றி நெல்லை டவுண் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். பதற்றத்தை தணிக்க, நெல்லை மாநகர  காவல் துணை ஆணையர் கீதா தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

வக்ஃப் வாரியத்திற்கு சொந்தமான 32 சென்ட் இடம் பிரச்சனை தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் கொல்லப்பட்டார். கருணாநிதி முதல்வராக இருந்தபோது முதல்வர் தனிப்பிரிவு அதிகாரியாக ஜாஹிர் உசேன் பிஜில் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.