பிரேமலதா விஜயகாந்திற்கு ஈபிஎஸ் வாழ்த்து!
Top Tamil News March 18, 2025 07:48 PM

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த்துக்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து கூறியுள்ளார். 


கேப்டன் என தமிழ் சினிமா கலைஞர்களாலும், ரசிகர்களாலும், பொதுமக்களாலும்   அன்போடு அழைக்கப்படுபவர் விஜயகாந்த். அவரது அலுவலகத்துக்கு சென்றால், யார் வேண்டுமென்றாலும், எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் இன்னும் நிலையை  உருவாக்கி வைத்தவர். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தை தொடங்கி அரசியலிலும் தனது வலிமையான முத்திரையை பதித்த விஜயகாந்த் இப்போது இல்லை என்றாலும், 
விஜயகாந்த் மனைவி தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்கள் கேப்டன் வழியில் கட்சியும், மக்களையும் நல்வழியில் நடத்துகிறார். 


 

இந்நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் தளத்தில், “அன்பு சகோதரி, மரியாதைக்குரிய தேசிய முற்போக்கு திராவிடக் கழகத்தின் பொதுச் செயலாளர் திருமதி பிரேமலதா விஜயகாந்திற்கு எனது இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்! மக்களின் நலனுக்காக நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் என்றும் சிறக்கவும், நீண்ட ஆயுள், நல்ல ஆரோக்கியம், மகிழ்ச்சி, மற்றும் மக்களின் நலனுக்காக உங்கள் சேவை தொடரவும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.