முதல்வர் வீட்டுக்கு அண்ணாமலை வரட்டும், என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம்: அமைச்சர் ரகுபதி
WEBDUNIA TAMIL March 18, 2025 07:48 PM

முதல்வர் ஸ்டாலின் வீட்டை முற்றுகையிடுவோம் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறிய நிலையில், "முதலில் அண்ணாமலை முதல்வர் வீட்டுக்கு வந்து பார்க்கட்டும்; என்ன நடக்கிறது என்பதை அப்புறம் பார்க்கலாம்," என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்திருக்கிறார். இந்த கருத்து அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் ரகுபதி செய்தியாளர்களிடம் பேசும் போது, "கடந்த 10 ஆண்டுகளாக, பாஜக அல்லாத மாநிலங்களில் ஆட்சி நடைபெறும் அரசுகளை மத்திய அரசு தொல்லை கொடுத்து வருகிறது. அமலாக்கத்துறையை கேடயமாக பயன்படுத்தி, பாஜக அரசு பழிவாங்குகிறது.

அமலாக்கத்துறை, சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை ஏவி, எதிர்க்கட்சிகளுக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்கின்றன. பாஜகவில் சேர்ந்தவர்களின் மீது உள்ள வழக்குகள் வாபஸ் பெறப்படுகின்றன, பாஜகவில் இணைந்ததும் அவர்கள் புனிதர்களாகிவிடுகிறார்கள், ஆனால் எதிர்க்கட்சிகளில் இருந்தால் பழிவாங்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.எனக் குறிப்பிட்டார்.

மேலும், "முதல்வர் வீட்டை அண்ணாமலை முற்றுகையிட வந்து பார்க்கட்டும்; என்ன நடக்கிறது என்பதை அப்புறம் பார்க்கலாம். டாஸ்மார்க் ஊழல் குறித்து ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா? எந்த தவறிற்கும் முதல்வர் பதில் கூற மாட்டார். யார் மீதாவது குற்றச்சாட்டு கூறலாம், ஆனால் அது ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட வேண்டும்," என அவர் தெரிவித்தார்.

Edited by Mahendran

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.