38 வயதான டேவிட் வார்னர் சர்வதேச கிரிக்கெட் இருந்து கடந்த வருடம் ஓய்வு பெற்றார். இருப்பினும் உலக நாடுகளில் நடைபெறும் பிரான்சைஸ் டி20 கிரிக்கெட் தொடர் விளையாடி வருகிறார். சமூக வலைதளங்களில் எப்பொழுதுமே ஆக்டிவாக இருக்கும் வார்னர் பதிவுகளை வெளியிடுவது வழக்கம். அது ரசிகர்களை ஈர்க்கும் விதமாகவும் இருக்கும். இந்த நிலையில் நான் நாடாளுமன்ற உறுப்பினராகலாம் என்று நினைக்கிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? என்று எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதனை பார்த்த இணையவாசிகளோ எங்கு ?ஆஸ்திரேலியாவா? இந்தியாவா? அதற்கு பதில் கேட்டு வருகிறார்கள். ஆனால் ஆஸ்திரேலியா அரசியல் சூழல் குறித்த எக்ஸ் பக்கத்தில் பதிவுக்கு தான் வார்னர் இப்படி ரிப்ளை கொடுத்துள்ளார். அது ஆஸ்திரேலியா அரசியல் என்பது உறுதியாகி உள்ளது. இதற்கு முன்பாக தெலுங்கு படமான ராபின்ஹூட் என்ற படத்தில் தான் நடிப்பது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருந்தார். சமூக வலைதளத்தில் சினிமா பாடல்களுக்கு ரீல்ஸ் போட்டும் அசத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.