வீடியோ : ஆத்தி என்னா அடி..!! 6, 6, 0, 2, 6, 6 ஷஹீன் ஆப்ரிடி “பந்துவீச்சை சிதறடித்து வாணவேடிக்கை” காட்டிய டிம் சைஃபர்ட்..!!
SeithiSolai Tamil March 18, 2025 09:48 PM

நியூசிலாந்து – பாகிஸ்தான் இடையிலான 2-வது T20 (மார்ச் 18, 2025) போட்டியில் டிம் சைஃபர்ட் தனது அதிரடியான ஆட்டத்தால் பாகிஸ்தான் பந்துவீச்சை சிதறடித்து வாணவேடிக்கை நிகழ்த்தினார். இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற்று விட வேண்டும் என்ற எண்ணத்தில் களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு இவருடைய ஆட்டம் கதிகலங்க வைத்தது. அதுவும் முன்னணி சிறப்பான பந்து வீச்சாளரை விளாசியது தான்..!!

ஷஹீன் ஆப்ரிடி வீசிய முதல் ஓவரில் 1 ரன்னும் எடுக்காத சைஃபர்ட், 2-வது ஓவரிலேயே சரியான பதிலடி கொடுத்தார். முதல் பந்தில் லாங்-ஆனுக்கு மேலே சிக்ஸ் அடித்து தொடங்கினார், அதன்பின் ஆஃப் ஸ்டம்ப் வெளியே வந்த பந்தை மறுபடியும் வானத்தை நோக்கி அனுப்பினார். 3-வது, 4-வது பந்துகளில் 2 ரன்கள் மட்டுமே எடுத்து அமைதியாக விளையாடதான் போகிறார் என்று இன்னும் போது மறுபடியும் ருத்ர தாண்டவம் ஆடினார், 5-வது மற்றும் 6-வது பந்துகளை நீண்ட தூரத்திற்கு சிக்ஸாக அடித்தார்.

“>

 

நியூசிலாந்து அணிக்கு அதிரடி தொடக்கம்:

சைஃபர்டின் இந்த அதிரடி ஆட்டம், நியூசிலாந்து அணிக்கு ஒரு உற்சாகமான தொடக்கத்தை வழங்கியது. தொடக்க ஓவர்களில் சிறப்பாக பந்துவீசியிருந்த ஷஹீன் ஆப்ரிடி, இந்த ஓவரில் முழுமையாக தடுமாறினார். ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் அடித்து, சைஃபர்ட் பாகிஸ்தான் அணியின் கோணங்களை மாற்றியுள்ளார். இந்த அதிரடி தாக்குதலால், நியூசிலாந்து பந்துவீச்சின் மூலம் கட்டுப்படுத்த முயன்ற பாகிஸ்தான் அணிக்கு பெரும் திகைப்பை ஏற்படுத்தியது. ஆட்டத்தின் போக்கே மாறும் வகையில், சைஃபர்ட் தனது அதிரடி ஆட்டத்தால் எதிரணியை நெருக்கடியில் தள்ளினார்.

“>

 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.