இலங்கை வீரர் பதினாரா சிஎஸ்கே அணிக்காக விளையாடியவர். இவருடைய வேகப்பந்து வீச்சால் எதிரணியினர் நெருக்கடியை சந்திக்கும் அளவிற்கு சிக்கலை உண்டாக்குவார். இதனால் சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு இவர் மிகவும் முக்கிய பங்காற்றி வருகிறார் என்றே சொல்லலாம். இதனால் இவருக்கு தமிழ்நாட்டில் பெண் ரசிகர்கள் ஏராளமாக உள்ளார்கள். அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்டு வரும் பாக்கியலட்சுமி சீரியலில் இனியா என்ற கதாபாத்திரத்தில் நேகா என்பவர் நடித்து வருகிறார். இவர் இலங்கை பதினாராவை காதலிப்பதாகவும் இருவரும் அடிக்கடி சந்தித்து டேட்டிங் செய்து வருவதாகவும் தகவல் வெளியாகி வந்தது.
இந்த நிலையில் இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள நடிகை நேகா, “நான் யாரையும் காதலிக்கவில்லை. நான் பதினாராவோடு காதலில் இருப்பதாக கூறுவது பொய். இதுபோன்று என்னுடைய பெயர் வேறு ஒரு நடிகரோடும் சேர்த்து பேசப்படுகிறது. அதிலும் உண்மை இல்லை என்று விளக்கம் அளித்துள்ளார். இந்த தகவல் ஆனது தற்போது வைரலாகி வருகிறது.