புதுவையில் ஆட்டோ சங்க பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.இதனால் புதுவையில் வழக்கம்போல் ஆட்டோக்கள் ஓடின.
ஆட்டோ சங்க பிரதிநிதிகள் இன்று (18.3.2025) செவ்வாய்க்கிழமை போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ள நிலையில் மாவட்ட ஆட்சியரின் அழைப்பை ஏற்று ஆட்டோ சங்க பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கனை மாலை நேரில் சந்தித்து 2-வது கட்ட ஆலோசனையில் ஈடுபட்டார்கள்.
இக்கூட்டத்தில் பேசிய சங்க உறுப்பினர்கள் புதுவையில் சுமார் 3000 ஆட்டோ ஓட்டுநர்கள் உள்ளோம் என்றும் முன்பு வைத்த தங்கள் கோரிக்கையான நலவாரியம் அமைக்க வேண்டும் என்றும் மேலும் ஆப் மூலமாக ஆட்டோ கட்டணம் பெறுவதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என்றும் மேலும் அனுமதி இல்லாத இரு சக்கர வாடகை வாகனங்களை அனுமதிக்க கூடாது என்றும் கேட்டுக் கொண்டார்கள். மேலும் இது சம்பந்தமாக ஆட்சியரிடம் நாளை நாங்கள் போராட்டம் நடத்த உள்ளதாகவும் கருத்து தெரிவித்தார்கள். மாவட்ட ஆட்சியர் முதல்வர் மற்றும் சம்பந்தப்பட்ட துறை செயலாளரிடமும் கலந்து ஆலோசித்து தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் நாங்கள் போராட்டத்தை ஒத்தி வைக்கிறோம் என மாவட்ட ஆட்சியரிடம் உறுதி அளித்தார்கள் பேச்சுவார்த்தையில் ஆட்டோ சங்க பிரதிநிதிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.இதையடுத்து புதுவையில் ஆட்டோ சங்க பிரதிநிதிகள், மாவட்ட ஆட்சியர் உடன் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதால் ஆட்டோ ஓட்டுநர்கள் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது.இதனால் புதுவையில் வழக்கம்போல் ஆட்டோக்கள் ஓடின.