கூகுள் பொய் சொல்லாது..? கூகுள் மேப் பார்த்து சென்ற கார் ஆற்றுக்குள் பாய்ந்து விபத்து!
Newstm Tamil March 19, 2025 12:48 AM

கேரள மலப்புரம் கோட்டக்கல் சேங்கோட்டூர் பகுதியைச் சேர்ந்தவர் பாலகிருஷ்ணன், 57, இவர், சதானந்தன், விசாலாட்சி, ருக்மிணி, கிருஷ்ணபிரசாத் ஆகிய உறவினர்களுடன், நேற்று முன்தினம் மாலை பாலக்காடு - --திருச்சூர் எல்லை பகுதியிலுள்ள குத்தாம்புள்ளி பகுதிக்கு காரில் சென்றனர்.

வீட்டு விேஷசத்துக்கு தேவையான ஜவுளி எடுத்து, இரவு, 7:30 மணிக்கு வீட்டுக்கு திரும்பினர். அப்போது, கூகுள் மேப் பார்த்து வழித்தடம் அறிந்து காரை ஓட்டினார். திருவில்வாமலை பகுதியில், கூகுள் மேப் தவறாக வழிகாட்டியதால், அணைக்குச் செல்லும் வழியில் சென்ற கார், ஆற்றினுள் விழுந்தது.

கார் விழுந்த பகுதியில் ஆற்றில் ஐந்து அடி ஆழத்துக்கு மட்டுமே தண்ணீர் இருந்ததால், காரில் இருந்த ஐந்து பேரும் அதிர்ஷ்ட வசமாக தப்பினர். இதை கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து, காரில் இருந்தவர்களை மீட்டு கரை சேர்த்தனர். தகவல் அறிந்த பழையன்னூர் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டனர்.

நேற்று காலை பொக்லைனின் உதவியுடன் கார் மீட்கப்பட்டது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.