டிராகன் திரைப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து இருந்தது. இப்படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கயாடு லோகர் மற்றும் நடிகை அனுபமா பரமேஸ்வரன் நடித்திருந்தார். டிராகன் திரைப்படத்தில் விஜே சித்து, ஹர்ஷத் கான், மிஷ்கின், ஜார்ஜ் மரியான், கே.எஸ்.ரவிக்குமான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைத்து இருந்தார். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன.
டிராகன் திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த பிப்ரவரி 21ந் தேதி திரைக்கு வந்தது. ரசிகர்களை மிகவும் கவர்ந்தது மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பை பெற்ற டிராகன் திரைப்படம் பாக்ஸ் ஆபிஸிலும் பட்டைய கிளப்பியது. இப்படம் உலகளவில் ரூ.150 கோடி வசூலை நெருங்கி வருகிறது. இதன்மூலம் இந்த ஆண்டு அதிக வசூல் செய்த தமிழ் படமாக டிராகன் மாறி உள்ளதோடு, பிரதீப் ரங்கநாதன் கெரியரில் அதிக வசூல் செய்த படமாக திகழ்ந்து வருகிறது.
இந்நிலையில் டிராகன் படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி வருகிற மார்ச் 21ந் தேதி டிராகன் திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி போன்ற மொழிகளிலும் இப்படம் ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது.