டாஃபே நிறுவனத்தின் துணை தலைவராக லட்சுமி வேணு நியமனம்....

இந்தியாவின் மிகப்பெரிய டிராக்டர் உற்பத்தி நிறுவனமான ட்ராக்டர் அண்ட் ஃபார்ம் எக்யூப்மென்ட் லிமிட்டட் எனப்படும் டாஃபே நிறுவனத்தின் துணை தலைவராக டாக்டர் லட்சுமி வேணு நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனத்தின் அடுத்த கட்ட வளர்ச்சிக்கும், எதிர்கால மேம்பாட்டுக்கும் இவரின் பங்களிப்பை அதிகப்படுத்தும் வகையில் இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. டாக்டர் லட்சுமி மிகவும் துடிப்பான தலைவர், பண்ணை இயந்திரமயமாக்கல் மற்றும் ஆட்டோ பாகங்கள் வணிகத்தில் அவரது சாதனைகளுக்குப் பெயர் பெற்றவர்.தமிழகத்தின் பிசினஸ் குடும்பத்தில் மிக முக்கியமானதாக பார்க்கப்படும் டாஃபேவில் இந்த நிர்வாக மாற்றும், நிறுவனத்தை அடுத்தக்கட்ட தலைவர்களிடம் ஒப்படைக்கும் பணியை மேற்கொள்ள தொடங்கியுள்ளது. லட்சுமி வேணு அவர்கள், யேல் பல்கலைக்கழகத்தில் பட்டதாரி மற்றும் இங்கிலாந்தின் வார்விக் பல்கலைக்கழகத்தில் பொறியியல் மேலாண்மையில் முனைவர் பட்டம் பெற்றவர்.டாஃப்பின் மாஸி பெர்குசன் மற்றும் ஐஷர் டிராக்டர்கள் வணிகத்தில் டாக்டர் லட்சுமியின் சிந்தனை, வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்ட அணுகுமுறை, வலுவான தர நோக்குநிலை மற்றும் ஆழ்ந்த ஈடுபாடு ஆகியவை அவரது தலைமைத்துவத்தையும் , புதுமை மற்றும் சிறப்பிற்கான அவரது அர்ப்பணிப்பையும் பிரதிபலிக்கின்றன.இந்த நியமனம் குறித்து பேசிய லட்சுமி வேணு, டாஃபே நிறுவனத்தின் வாரியத்திற்கு நன்றி தெரிவித்தார். தற்போது டாஃபே நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக அதிகாரியாக இருக்கும், மல்லிகா ஸ்ரீவாசன், டாக்டர் லட்சுமி எங்கள் தலைமைத்துவக் குழுவின் முக்கிய உறுப்பினராகவும், TAFE இன் வாரிய உறுப்பினராகவும் இருந்து வருகிறார். அவரை டாஃபே வாரியத்தின் துணைத் தலைவராக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைவதாக தெரிவித்தார். லட்சுமி வேணுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த பொறுப்பு என்பது பிசினஸை பிரிக்கும் விதமாகவும் பார்க்கப்படுகிறது. அதாவடு வேணு சீனிவாசன், மல்லிகா சீனிவாசன் அவர்களின் பிள்ளைகளான லட்சுமி வேணு, சுதர்சன் ஆகியோருக்கு நிறுவனத்தின் பொறுப்புகளை பிரித்து கொடுப்பதற்கான முடிவாகவே உள்ளது. ஏனெனில் டிவிஎஸ் ஹோல்ஸ் மற்றும் டாஃபே நிறுவனத்தின் பொறுப்புகளை பிள்ளைகள் இருவருக்கும் பகிரப்பட்டுள்ளன. அதாவது டிவிஎஸ் ஹோல்டிஸ், டிவிஎஸ் மோட்டார் கம்பெனி ஆகியவற்றின் நிர்வாக இயக்குநராக சுதர்ஷன் உள்ளார். இதுமட்டும் இல்லாமல் நிதி நிறுவனமான டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸின் தலைவராகவும் உள்ளார். இந்த நிலையில் லட்சுமிக்கு டாஃபே நிறுவனத்தில் முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. லட்சுமி வேணு, சுந்தரம் கிளேட்டன் நிர்வாக குழுவிலும் முக்கிய பொறுப்பில் உள்ளார்.