என்ன ஒரு பித்தலாட்டம்…!! 6 வருஷமா ஆபீசை எட்டி கூட பாக்கல… ஆனா ரூ.36 லட்சம் சம்பளம்…. ஊழியருக்கு ஆப்பு வைத்த நீதிமன்றம்…!!
SeithiSolai Tamil March 19, 2025 02:48 AM

ஸ்பெயின் நாட்டில் கேடிஸ் நகரில் உள்ள ஒரு நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மேற்பார்வையாளராக இருந்த ஜோஆகின் கார்ஸியா 6 ஆண்டுகளாக வேலைக்கு வராமல் முழு சம்பளம் பெற்றிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 1990-ஆம் ஆண்டில் இந்த முனிசிபல் நீர்சுத்திகரிப்பு நிறுவனத்தில் சேர்ந்து, 2010ஆம் ஆண்டு வரை, அவரது 20 ஆண்டுகால சேவைக்கு அவார்டு வழங்க திட்டமிடப்பட்டபோது தான் அவர் 6 ஆண்டுகளாக அலுவலகத்திற்கு வராதது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நபர் 36 லட்ச ரூபாயை ஆண்டு வருமானமாக பெற்றுள்ளார். அதாவது அந்த நிறுவனத்தில் மேலதிகாரிகள் இடம் மாறியுள்ளனர்.

அந்த நிறுவனத்தில் இரண்டு பிரிவுகள் இருந்தது. அப்போது கார்ஸ்யாவை கண்காணிக்கும் பொறுப்பு மற்றொரு பிரிவுக்கு தான் உள்ளது. நமக்கு இல்லை என நினைத்து இரண்டு பிரிவை சேர்ந்தவர்களும் அலட்சியமாக இருந்துள்ளனர். இதை சாதகமாகப் பயன்படுத்தி, கார்ஸியா அலுவலகத்திற்கு வராமலேயே சம்பளம் பெற்றார். இதுகுறித்து கேட்ட போது கார்ஸியா சரியாக பதில் அளிக்கவில்லை. இதுகுறித்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் கார்ஸியாவுக்கு 25 லட்ச ரூபாய் அபராதம் விதித்து உத்தரவு பிறப்பித்தது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.