தமிழக மீனவர்கள் 10 பேர் கைது.. இலங்கை கடற்படையினர் மீண்டும் அராஜகம்!
Dinamaalai March 20, 2025 11:48 AM

தமிழக மீனவர்கள் 10 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் மற்றும் புதுவைச் சேர்ந்த மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாகக் கூறி இலங்கை கடற்படையால் கைது செய்யப்படும் சம்பவம் தொடர்ந்து நிகழ்ந்து வரும் நிலையில், தமிழக மீனவர்களின் விசைப் படகுகளைப் பறிமுதல் செய்து அரசுடைமையாக்குவது போன்ற நடவடிக்கைகளையும் இலங்கை அரசு மேற்கொண்டு வருகிறது.

இது குறித்து பல முறை இந்தியா பேச்சுவார்த்தை நடத்தியும், தமிழக மீனவர்களின் பிரச்சனைகள் தீராமல் நீடித்து வருகிறது. இந்த துயரச் சம்பவங்களுக்கு இடையே தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்களும் அவ்வப்போது தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே கைது செய்யப்படும் தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் நிகழ்வுகளும், மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவது, தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்களும் தற்போது அரங்கேறி வருகின்றன.

இந்நிலையில் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 10 தமிழக மீனவர்கள் எல்லைத் தாண்டி மீன்பிடித்ததாக் கூறி அவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு 2 படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்துள்ளது எனவும் கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.