நகை பிரியர்களுக்கு தொடர் சோதனை! ரூ.67,000-ஐ நெருங்கும் தங்கம் விலை..!
Newstm Tamil March 20, 2025 06:48 PM

சென்னையில் இன்று (மார்ச் 20) ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ. 8,310 விலைக்கு விற்பனையாகி வருகிறது. அதேபோல 8 கிராம் ஆபரணத் தங்கம் 66,480 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்றைய தினத்தை ஒப்பிடும் போது, தங்கம் விலை இன்று மேலும் உயர்ந்துள்ளது.

கடந்த மார்ச் 14 ஆம் தேதி ரூ.66,400-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.

அதனைத் தொடர்ந்து 15 ஆம் தேதி பவுனுக்கு ரூ.640 குறைந்து ரூ.65,760-க்கும், மார்ச் 17 ஆம் தேதி பவுனுக்கு ரூ.80 குறைந்து ரூ.65,680-க்கு விற்பனையானது.

செவ்வாய்க்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ. 66,000-க்கு விற்பனையானது. புதன்கிழமை மீண்டும் தங்கத்தின் விலை பவுனுக்கு ரூ.320 உயர்ந்து மக்களிடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், சென்னையில் வியாழக்கிழமை ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு அதிரடியாக ரூ.160 உயர்ந்து, ரூ. 66,480 என்ற புதிய உச்சத்தை தொட்டுள்ளது.

ஒரு கிராமுக்கு ரூ.20 அதிகரித்து ரூ. 8,310-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிரது.

தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து பவுன் ரூ.67 ஆயிரத்தை நெருங்குவது நடுத்தர மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இன்று சென்னையில் ஒரு கிராம் வெள்ளி விலை ரூ. 114-க்கு விற்பனையாகி வருகிறது. அதே போல் 1 கிலோ வெள்ளி 1,14,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ள நிலையில், வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.