சென்னை படூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரியில், பேராசிரியராக பணியாற்றி வந்த சஞ்சுராஜ், அதே கல்லூரியில் கம்ப்யூட்டர் சயின்ஸ் கற்பிக்கும் பெண் பேராசிரியருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக பெண் பேராசிரியை, கல்லூரி நிர்வாகத்திடம் அதிகாரப்பூர்வமாக புகார் அளித்துள்ளார். இதனை அறிந்த கல்லூரி மற்ற பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இணைந்து சஞ்சுராஜுக்கு தர்மஅடி கொடுத்தனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது குறித்து தகவல் அறிந்த கேளம்பாக்கம் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றம் சாட்டப்பட்ட பேராசிரியர் சஞ்சுராஜை கைது செய்தனர். மேலும், பெண் பேராசிரியர் அளித்த புகாரின் அடிப்படையில், அவர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.