அரசு போக்குவரத்துக்கழகத்தில் 3,274 ஓட்டுநர், நடத்துநர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. சென்னை உட்பட 8 மண்டலங்களுக்கு 25 பகுதிகளில் பணியிடங்களை நிரப்ப கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, அதிகபட்சமாக கும்பகோணத்தில் 756 இடங்களும், சேலத்தில் 486 இடங்களும், சென்னையில் 364 இடங்களும் நிரப்பப்பட உள்ளன.
இதேபோல், திருநெல்வேலியில் 362 இடங்களும், கோவையில் 344 இடங்களும், மதுரையில் 322 இடங்களும், விழுப்புரத்தில் 322 இடங்களும் காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளன . அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 318 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஓட்டுநர், நடத்துநர் பணிகளுக்கு நாளை பிற்பகல் 1 மணி முதல் முதல் ஏப்ரல் 21ம் தேதி வரை https://www.arasubus.tn.gov.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. எழுத்து தேர்வு, செய்முறை மற்றும் நேரடி நேர்முகத் தேர்வு மூலம் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.