'கொஞ்சம் ஏளனமாக சொல்ல வேண்டுமானால், தமிழ்நாட்டிற்கு சென்னையும், கோவையும் தான் அதிக வரி கொடுக்கின்றது. அரியலூர் மற்றும் கோவில்பட்டியில் இருப்பவர்கள் எங்களுக்கு என்ன செய்கிறீர்கள் என்று கேட்டால், சென்னையும், கோவையும், 'நாங்க தான் பணம் கொடுக்குறோம். அதனால, எங்களுக்கு பணம் திருப்பி கொடுங்க. அங்கே செலவு' என்று சொல்ல வேண்டும்" என்று நேற்று சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய பட்ஜெட் குறித்து நிர்மலா சீதாராமன் பேசியிருந்தார்.
இந்தப் பேச்சிற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக எம்.பி கனிமொழி தனது எக்ஸ் பக்கத்தில், "நீங்கள் தமிழ்நாட்டையும், தமிழ் மக்களையும் ஏளனம் செய்வதைத்தான் இத்தனை காலமாய் எதிர்த்துப் போராடிக் கொண்டிருக்கிறோம்.
வரலாற்றில் தமிழ் மக்களை பழித்தவர்களின் நிலை என்ன என்பதை அம்மையார் நிர்மலா சீதாராமன் அவர்கள் ஒரு நிமிடம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தமிழுக்காகவும், எங்களது உரிமைகளுக்காகவும் போராடுவது உங்களுக்கு ஏளனத்திற்கு உரியதாக தோன்றுகிறதா?
தமிழர்களை எள்ளி நகையாடும் உங்களுக்கு தமிழ்நாட்டு மக்கள் மறுபடியும் விரைவில் தக்க பாடம் புகட்டுவார்கள்!" என்று பதிவிட்டுள்ளார்.
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK