டெல்லியில் ஒன்றிய அரசின் கல்விக் கொள்கைகளுக்கு எதிராக பாராளுமன்றம் நோக்கிச் சென்ற மாணவர் பேரணியில் பங்கேற்று உரையாற்றினார் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி.
”நாட்டின் ஒவ்வொரு பல்கலைக் கழகத்திலும் தனது ஆட்களை துணை வேந்தர்களாக நியமித்து, இந்தியாவின் கல்விமுறையை தனது கட்டுப்பாட்டிற்குள் எடுத்து இளைஞர்களின் எதிர்காலத்தை அழித்து வருகிறது ஆர்.எஸ்.எஸ்.
கல்வித்துறையை ஆர்.எஸ்.எஸ். பறித்து வருவது பற்றி பிரதமர் மோடிக்கு கவலை இல்லை. அவருடைய கவலை எல்லாம் அதானி, அம்பானியின் செல்வங்களைப் பாதுகாப்பது மட்டுமாகவே உள்ளது. நாம் அனைவரும் ஒன்றாகப் போராடி ஆர்.எஸ்.எஸ், பாஜகவை தோற்கடிப்போம்” என்று ராகுல் காந்தி மாணவர்கள் மத்தியில் பேசியுள்ளார்.