மியான்மர் மற்றும் தாய்லாந்து நிலநடுக்கம்; 107 உயிரிழப்பு, 350 பேர் படுகாயம்; பலி எண்ணிக்கை பன்மடங்கு உயரும் அச்சம்..!
Seithipunal Tamil March 29, 2025 09:48 AM

இன்று மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ரிக்டர் அளவில் 07 புள்ளிகளுக்கு மேல் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.  இந்தியாவின் கொல்கத்தா, மணிப்பூர் மற்றும் சீனா, வங்கதேச பகுதிகளிலும் இந்த நில அதிர்வு உணரப்பட்டது.

குறித்த நிலநடுக்கம் மியான்மர் மற்றும் தாய்லாந்தில் கட்டிடங்கள் சரிந்து விழும் வீடியோ காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலநடுக்கத்தால் கடுமையான உயிர்ச்சேதமும், பொருட்சேதமும் ஏற்பட்டுள்ளது.

தற்போதைய நிலவரத்தை படி, இந்த நிலநடுக்கத்தில் உயிரிழப்பு எண்ணிக்கை 107 ஆக உயர்ந்துள்ளது. மியான்மரில் 103 உயிரிழப்புகளும், தாய்லாந்தில் 04 உயிரிழப்புகளும் இதுவரை பதிவாகியுள்ளன.

அத்துடன், மியான்மரில் 350-க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். தாய்லாந்தில் 50-க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டுள்ளனர். தொடர்ந்து அங்கு மீட்புப்பணிகள் நடந்து வரும் சூழலில் உயிரிழப்பு எண்ணிக்கை பன்மடங்கு உயரும் என்று அஞ்சப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.