சனிப்பெயர்ச்சி 2025: யாருக்கு ஜாக்பாட்? ; யார் கவனமாக இருக்க வேண்டும் - 12 ராசிக்குமான பலன்கள்
Vikatan March 29, 2025 09:48 AM

மேஷம்:

கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். மேஷத்துக்கு ஏழரைச் சனி ஆரம்பம். ஆனாலும் மாறுபட்ட சிந்தனையால் சாதிக்கவைப்பார் சனி பகவான். செலவுகள் சுபச்செலவுகளாகும். வீட்டிலும் பணியிலும் பொறுப்புகள் அதிகரிக்கும்! முழுமையாகப் படிக்க..

சனிப்பெயர்ச்சி பலன்கள் மேஷம்

ரிஷபம்:

கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். ரிஷபத்துக்கு லாப ஸ்தானமாகிய 11-ல் அமர்ந்து பலன் தரப்போகிறார். பல விஷயங்கள் நல்லபடியாக மாறி நன்மைகள் பெருகும். குடும்பத்தில் நிம்மதி பிறக்கும். திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். முழுமையாகப் படிக்க..

மிதுனம்:

கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். மிதுன ராசிக்கு 10-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். எதிர்பாராத அனுகூலம், செல்வாக்கு கூடிவரும். எனினும், வியாபாரம் மட்டுமன்றி அனைத்து விஷயங்களிலும் தெளிவோடு முடிவெடுக்க வேண்டிய காலம் இது. முழுமையாகப் படிக்க..

சனிப்பெயர்ச்சி 2025 மிதுனம்

கடகம்:

கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். கடக ராசிக்கு 9-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். அஷ்டமத்துச் சனி விலகப்போகிறது; இனி, உங்கள் கஷ்டமெல்லாம் நீங்கி நன்மைகள் அனைத்தும் நடக்கும். சாதிக்கும் நம்பிக்கை துளிர்விடும். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். முழுமையாகப் படிக்க...

சிம்மம்:

கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். சிம்ம ராசிக்கு 8-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். `அஷ்டமத்துச் சனி கஷ்டம் தருமே’ என்று கலங்கவேண்டாம். எல்லா விஷயங்களிலும் முன்னெச்சரிக்கையுடன் நடந்துகொண்டால், எவ்வித பாதிப்புகளும் உண்டாகாது. முழுமையாகப் படிக்க..

கன்னி:

கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். கன்னி ராசிக்கு 7-ம் இடத்தில் அமர்ந்து, கண்டகச் சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார். இந்தக் காலத்தில் வழக்குகள் சாதகமாகும்; பணப்புழக்கம் அதிகரிக்கும். எனினும், எல்லா விஷயங்களிலும் கொஞ்சம் எச்சரிக்கை தேவை. முழுமையாகப் படிக்க..

2025 சனிப்பெயர்ச்சி கன்னி ராசி பலன்கள்

துலாம்:

கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். துலாம் ராசிக்கு 6-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். இந்த சனிப் பெயர்ச்சியில் ஜாக்பாட் அடிக்கும் ராசிகளில் துலாம் ராசியே முதலிடத்தில் உள்ளது. முழுமையாகப் படிக்க..

விருச்சிகம்:

கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். விருச்சிக ராசிக்கு 5-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். இந்த சனிப் பெயர்ச்சியில், உங்களுக்கு ஓரளவு பணவரவு உண்டாகும். குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்துப் பேசி மகிழக் கூடிய இனிய நிலை உருவாகும். முழுமையாகப் படிக்க..

சனிப்பெயர்ச்சி 2025 விருச்சிகம்

தனுசு்

கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். தனுசு ராசிக்கு 4-ம் இடத்தில் அமர்ந்து பலன் தரப்போகிறார். சில விஷயங்களிலும் அலைச்சல் இருக்கத்தான் செய்யும். எனினும் உங்களின் மதிப்பும் அந்தஸ்தும் உயரும். முழுமையாகப் படிக்க..

மகரம்:

 கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். மகர ராசிக்கு 3-ம் இடத்திலிருந்து பலன் தரப்போகிறார். இனி, வரும் காலம் உங்களுக்குப் பொற்காலம் எனலாம். தன்னம்பிக்கை துளிர்விடும். இழந்த செல்வம், செல்வாக்கை எல்லாம் மீண்டும் பெறுவீர்கள். முழுமையாகப் படிக்க..

மகரம்

கும்பம்:

கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். கும்ப ராசிக்கு 2-ம் இடத்திலிருந்து பலன் தரப்போகிறார். நீங்கள் இதுவரை அனுபவித்த கஷ்டங்கள் விலகப்போகின்றன. குறிப்பாக, சதயம், பூரட்டாதி நட்சத்திரக் காரர்கள் மனப் பாரம் நீங்கி, பூரண சந்தோஷம் பெறுவார்கள். முழுமையாகப் படிக்க...

மீனம்:

கும்பத்திலிருந்து மீன ராசிக்குப் பெயர்ச்சி ஆகிறார் சனிபகவான். மீன ராசிக்கு ஜென்மச் சனியாய் அமர்ந்து பலன் தரப்போகிறார். ஆகவே, ஒருவித பதற்றம் உங்களை ஆட்கொள்ளலாம். கவலை வேண்டாம். தெய்வத்துணை உங்களுக்குப் பக்கபலமாக இருக்கிறது! முழுமையாகப் படிக்க...

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.