Empuraan: "மம்மூட்டிக்காகச் சபரிமலை போகக் காரணம்..." - நெகிழும் மோகன்லால்
Vikatan March 25, 2025 06:48 AM

ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் `எல்2: எம்புரான்' இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக `எல்2:எம்புரான்' படக்குழுவினர் அனைவரும் பல்வேறு நகரங்களுக்கும் பம்பரமாய் சுற்றி வருகிறார்கள்.

இன்று (மார்ச் 24) சென்னையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.

Mohah Lal & Manju Warrier

இந்த நிகழ்வில் பேசிய மோகன்லால், "முதல்ல இந்தப் படத்தை ட்ரையாலாஜியாகதான் பண்ணணும்னு திட்டமிட்டோம்.

இந்த படம் நம்ம சினிமா துறைக்கானது. எல்2: எம்புரான் வித்தியாசமான திரைப்படம். இந்த படம் எங்களின் ரத்தமும் வியர்வையும் நிறைந்தது.

முக்கியமாக ஒரு பெரிய ஒத்துழைப்பு இந்தப் படத்துக்குக் கிடைச்சுருக்கு. மக்கள் இந்த படம் பார்க்க விரும்புறதுக்குக் காரணம் முதல் பாகம்தான்.

இந்தப் படம் வெற்றி அடைந்தால்தான் இந்த மாதிரியான அடுத்த படங்கள் எடுக்க முடியும். சினிமாங்கிற சக்கரம் சுத்தணும்னுனா பெரிய படங்களும் சின்ன படங்களும் ஓடணும்" என்றவரிடம் தொகுப்பாளர்கள்,

``எப்படி 40 வருடங்களில் 400 படங்கள் வரை நடிக்க முடிந்தது?'' எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு, `` 40 கிடையாது. மொத்தமாக 47 வருடங்கள்.

அந்த 7 வருடங்கள் மிகவும் முக்கியமானது. 400 படம் நடிச்சது எனக்கு ஆசிர்வாதம். நல்ல ஆடியின்ஸ் கிடைச்சிருக்காங்க" என்றார்.

சமீபத்தில் சபரிமலையில் தனது நண்பரான நடிகர் மம்மூட்டி உடல் நலம்பெற வேண்டி பூஜை செய்திருந்தார்.

Mohan Lal

அது குறித்துப் பேசும்போது, ``அந்த ஆழமான நட்பு பத்தி ஏன் சொல்லணும். சபரிமலைக்குப் போய் அவருக்காக வேண்டினேன். உங்களுக்காகவும் நான் வேண்டுவேன். என்னுடைய நண்பர்

அவர், என்னோட சகோதரர் அவர். அதனால். அவர் நலமுடன் இருக்கிறார். எல்லோருக்கும் இருக்கிற மாதிரி சின்ன பிரச்னை அவருக்கு அவ்வளவுதான்" என்றவரிடம்,

``நீங்கள் இங்கு உச்ச நடிகர்களுடன் சேர்ந்து நடிக்கிறீர்கள். ஆனால், அவர்கள் மலையாளத்தில் வந்து அப்படி நடிப்பார்களா?" எனச் செய்தியாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு,

``கெஸ்ட் ரோல்னு கிடையாது. ஐ எம் ஆக்டர், அவ்வளவுதான்" எனச் சிம்பிளாகக் கூறி முடித்துக் கொண்டார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : |

Part 02: |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.