Empuraan: "நம்ம பட நிகழ்ச்சிக்கு பிரதீப் ரங்கநாதன் ஆங்கர் பண்றாரான்னு..." - ப்ரித்விராஜ் கலகல
Vikatan March 25, 2025 06:48 AM

ப்ரித்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்திருக்கும் `எல்2: எம்புரான்' இம்மாதம் 27-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

இப்படத்தின் ப்ரோமோஷன் பணிக்காக `எல்2: எம்புரான்' படக்குழுவினர் அனைவரும் பல்வேறு நகரங்களுக்கும் புயலாய் சுற்றி வருகிறார்கள்.

இன்று (மார்ச் 24) சென்னையில் இப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது.

L2: Empuraan Team in chennai

இந்த நிகழ்வைக் கலக்கப்போவது யாரு தீனாவும் , தொகுப்பாளர் ஏஞ்சலினும் தொகுத்து வழங்கினார்கள்.

தொடக்கத்திலேயே தீனா குறித்து ப்ரித்விராஜ், ``நம்ம படத்தோட நிகழ்வுக்குப் பிரதீப் ரங்கநாதன் ஆங்கர் பண்றாரான்னு இவரைப் பார்த்ததும் நினைச்சேன்.

லூசிப்ஃபர் திரைப்படம் வெளியாகி இப்போ இந்த 6 வருஷதுல நிறைய விஷயங்கள் மாறிடுச்சு.

அப்போ மலையாள சினிமாவுல இப்போ இருக்கிற மாதிரியான விஷயங்கள் கிடையாது.

இந்தப் படத்தைத் தொடங்கும்போதே 5 மொழியில ரிலீஸ் பண்ணணும்னுதான் பிளான் பண்ணோம்.

படத்திற்கு டப்பிங் இயக்குநர் பாலா டப்பிங் வேலைகளையெல்லாம் ரொம்பவே நல்லா பண்ணியிருக்கார். `எல்2: எம்புரான்' படத்தை நீங்க தமிழ்ல பாருங்க" என்றவர்,

"இந்த படம் மலையாள சினிமாவின் அஸ்பிரேஷன். இந்த படம் வெற்றி பெற்றால் நிறைய விஷயங்கள் புதுசாகப் பண்ணுவோம்." என்றவரிடம்,

``இதற்காக இந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என எந்த காரணத்தைக் கூறுவீர்கள்?'' எனத் தொகுப்பாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

அதற்கு, ``நான் ஓகேவான படம் எடுத்திருக்கேனு நினைக்கிறேன் (மென்மையாகச் சிரித்துக் கொண்டே). வந்து பாருங்க..." என்றார்.

Prithviraj Sukumaran - L2: Empuraan

மேலும் பேசிய அவர், "முதல் பாகம் பார்க்கலைனாலும் இந்த பாகம் புரியும்படிதான் டிசைன் பண்ணியிருக்கோம்.

இந்தப் படத்தோட பின்னணிதான் அரசியல். இது அரசியல் திரைப்படம் கிடையாது." என்றவர் லூசிஃபர் படத்தின் தொடக்கக் காட்சி நடிகர் ரஜினிகாந்துக்கு நிகழ்ந்த உண்மை சம்பவத்திலிருந்து இன்ஸ்பயராகி எடுக்கப்பட்டது எனச் சமீபத்தியப் பேட்டியில் கூறியிருந்தார்.

இது குறித்த செய்தியாளரின் கேள்விக்குப் பதிலளித்த ப்ரித்விராஜ், ``அந்தச் சம்பவம் எனக்கு உண்மையானு தெரியாது. அதைப் பற்றி நான் எங்கையோ படிச்சிருந்தேன்.

ரஜினி சாருக்கு என்னுடைய ட்ரெய்லரை காட்டணும்னு நினைச்சேன். அவரும் ட்ரெய்லரை பல முறை பார்த்தாரு. அந்த விஷயங்களை மறக்கவே மாட்டேன்" எனக் கூறி முடித்துக் கொண்டார்.

வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி -இப்போது விகடன் ப்ளேயில்..!

Link : Part 01 : |

Part 02: |

80களில் தூத்துக்குடியை மிரள வைத்த டான்களின் கதை வேட்டை நாய்கள் - Gangs of தூத்துக்குடி இப்போது Audio formatல் உங்கள் Vikatan Playல். இப்பவே Vikatan APPஐ Download செய்யுங்கள் Play Iconஐ Click பண்ணி வேட்டை நாய்கள் கேளுங்க | #Vikatan #VikatanPlay #AudioBooks

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.