உங்கள் வீட்டில் வாங்கும் கேன் குடிநீர் பாதுகாப்பானதா? தெரிந்துகொள்வது எப்படி?
BBC Tamil March 27, 2025 01:48 AM
Getty Images

இந்தியாவில் கேனில் அடைக்கப்பட்ட குடிநீரைப் பயன்படுத்துவது சமீப ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. பெருநகரங்களில் மட்டுமே வழக்கத்தில் இருந்த இந்தப் பயன்பாடு கிராமங்களுக்கும் சென்றுள்ளதைக் காண முடிகிறது.

குடிநீரைப் பாதுகாப்பான முறையில் எப்படி அருந்துவது என்பது குறித்து மக்களிடையே பரவலாக விழிப்புணர்வு இருந்தாலும், குடிநீர் கேன்களை நாம் சரியாகத்தான் பயன்படுத்துகிறோமா என்பது கேள்விக்குறியே.

ஏனெனில், பலமுறை மறு உபயோகம் செய்யப்படும் அந்த கேன்களை ஒரு குறிப்பிட்ட காலத்துக்கு மேல் பயன்படுத்தக் கூடாது என்பது தெரியுமா?

கேன்கள் மட்டுமல்லாமல், வீடுகளில் நாம் அந்தக் குடிநீரை ஊற்றி வைக்கப் பயன்படுத்தப்படும் 'பப்பிள் டாப்' (bubble top) எனப்படும் கேனையும் நாம் சுத்தமாகப் பராமரிக்கிறோமா?

சமீபத்தில் நடைபெற்ற சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் மற்றும் விற்பனையாளர்களுக்கான உணர்திறன் பயிற்சிக் கூட்டத்தில், இதுதொடர்பாக சில பாதுகாப்பு வழிமுறைகளை உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள் வழங்கியதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

  • தண்ணீர் கேன்களை 50 முறைக்கு மேல் பயன்படுத்தக் கூடாது.
  • அழுக்கடைந்த, கீறல் விழுந்த கேன்களை மக்களுக்கு விநியோகிக்கக் கூடாது.
  • நேரடியாக சூரிய ஒளியில் வைக்கப்பட்டிருந்த கேன்களை விநியோகிக்கக் கூடாது.
  • குடிநீரின் தரத்தை உறுதிப்படுத்துவதும் அவசியம்.

மேற்கண்ட ஆலோசனைகள் அந்தக் கூட்டத்தில் வழங்கப்பட்டன.

"தமிழ்நாடு முழுவதும் லட்சக்கணக்கானோர் கேன் குடிநீரையே பயன்படுத்துகிறார்கள். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மூன்று மாவட்டங்களில் மட்டுமே நான்கில் மூன்று பங்கு கேன் குடிநீர் பயன்பாடு உள்ளது. ஆனால், இதுகுறித்து மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை" என்கிறார் சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியரும் மருத்துவத் துறை தலைவருமான எஸ். சந்திரசேகர்.

எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ. விதிகள் கூறுவது என்ன? Getty Images குடிநீர் கேனை தொடர்ந்து சுத்தப்படுத்த வேண்டும்

இதுமட்டுமின்றி, பாட்டில்கள் உள்ளிட்டவற்றில் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் நீரை 'அதிக ஆபத்தான உணவுப் பட்டியலில்' இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ வகைப்படுத்தியது.

இதுதொடர்பாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம்வெளியிட்டிருந்தது. அதில், பாட்டில்கள் உள்ளிட்ட எதுவொன்றிலும் அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் தண்ணீரை 'அதிக ஆபத்துள்ள உணவுப் பொருட்களின் பட்டியலில்' சேர்த்தது.

பொதுவாக, அதிக மாசுபாடு அடைவதற்கு வாய்ப்புள்ள உணவுப் பொருட்கள் இந்தப் பட்டியலில் சேர்க்கப்படும். அதன்படி, அதன் தரத்தைச் சோதிக்கக் கடுமையான கட்டுப்பாடுகள் பின்பற்றப்பட வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

கடந்த 2024 அக்டோபர் மாதம் உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தின் திருத்தப்பட்ட விதிமுறைகளின்படி, அடைக்கப்பட்ட குடிநீர் மற்றும் மினரல் தண்ணீருக்கு பி.ஐ.எஸ் தரச் சான்றிதழ் அவசியம்.

அதுதவிர, இவற்றைத் தயாரிக்கும் நிறுவனங்களுக்கு உரிமம் வழங்குவது அல்லது பதிவு செய்யப்படுவதற்கு முன்பாக, நேரடியாகச் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்திருக்க வேண்டும். அந்த நிறுவனங்களில் ஆண்டுக்கு ஒருமுறை மூன்றாம் தரப்பு நபர்களால் மறு ஆய்வு நடத்தப்பட வேண்டும்.

இவற்றோடு, மேலும் சில கேள்விகள் எழுகின்றன. வீடுகளில் கேன் குடிநீரைப் பயன்படுத்துவோர் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றாவிட்டால் ஏற்படும் ஆபத்துகள் என்ன? தங்கள் கேன் குடிநீர் பாதுகாப்பானதுதான் என உறுதி செய்ய என்ன செய்ய வேண்டும்?

கேன் குடிநீர் பாதுகாப்பானதா? Getty Images

"நாம் பயன்படுத்தும் குடிநீர் கேனிலும் பி.ஐ.எஸ்., எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ ஆகியவற்றின் தர உரிமம் இருக்கின்றதா, காலாவதியாகும் நாள், பேட்ச் எண் ஆகியவை இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். ஆனால், ஒரு சில வாட்டர் கேன்கள் தவிர பெரும்பாலானவற்றில் இவை இருப்பதில்லை" என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.

கேன் குடிநீரில் தேவையில்லாத பொருட்கள், தனிமங்களை வெளியேற்ற அவற்றை வடிகட்டுவதற்கு 5-6 முறைகள் உள்ளன. அதிலுள்ள ஆபத்தான நுண்ணுயிரிகளை நீக்குவதற்குப் புற ஊதா கதிர்களைக் கொண்டு செயல்படுத்தப்படும் யூ.வி. முறை, கனிமங்கள், உப்பு, பிற அசுத்தங்களை நீக்க ஆர்.ஓ. (ரிவர்ஸ் ஆஸ்மோசிஸ்) எனப்படும் சவ்வூடு பரவல், மைக்ரான் ஃபில்டர் உள்ளிட்ட முறைகள் உள்ளன.

"ஆனால், பெரும்பாலும் ஏதேனும் ஒருமுறையில்தான் கேன் குடிநீர் வடிகட்டப்படுகிறது. எனவே, எந்தெந்த முறையில் அந்தக் குடிநீர் வடிகட்டப்பட்டுள்ளது என்பதை நுகர்வோர் அறிந்துகொள்ள வேண்டும். மேலும், கேன் குடிநீரை விநியோகிக்கும் நிறுவனம் உரிய உரிமம் பெற்றுள்ளதா என்பதையும் சோதிக்க வேண்டும்" என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.

டிடிஎஸ் அளவு ஏன் முக்கியம்? Getty Images

குடிநீரைப் பொருத்தவரை அதன் தரம் டிடிஎஸ் (total dissolved solids) எனப்படும் மொத்த கரைந்த திடப்பொருட்களின் அளவை வைத்தே நிர்ணயிக்கப்படுகிறது. இதன் அளவுதான், அந்தக் குடிநீரில் ஆபத்தான எஃகு, ஆர்செனிக், ஃபுளூரைடு உள்ளிட்ட நச்சுப் பொருட்கள் எவ்வளவு உள்ளன என்பதை வெளிப்படுத்தும்.

பி.ஐ.எஸ் தர நிர்ணயத்தின்படி இதன் அளவு ஒரு லிட்டருக்கு 500 மி.கி என்ற அளவுக்கு மேல் இருக்கக்கூடாது. எனினும், டிடிஎஸ் இல்லாமலேயே இருந்தால் அந்தக் என அர்த்தம் என்கிறது 'கன்ஸ்யூமர் வாய்ஸ்' எனும் தன்னார்வல நுகர்வோர் அமைப்பு.

குறைவான அளவில் டிடிஎஸ் இருந்தால் அந்த நீரில் சுவையே இருக்காது என அந்த அமைப்பு கூறுகிறது. "பெரும்பாலான கேன் குடிநீரில் இதன் அளவு ஒரு லிட்டருக்கு 100 மி.கி என்ற அளவிலேயே இருக்கும்" என்கிறார் மருத்துவர் சந்திரசேகர்.

இந்த கேன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் கேன்கள் பெரும்பாலும் வெயிலிலேயே இருப்பதால், அதில் வேதிவினை விரைவாக நிகழ்ந்து பி.பி.ஏ (பிஸ்ஃபெனால் ஏ) எனப்படும் பிளாஸ்டிக் கேனில் அடங்கியிருக்கும் வேதிப்பொருள் உருக வழிவகுப்பதாகக் கூறுகிறார்.

உடல்நலப் பிரச்னைகள் Getty Images "கேனில் வாங்கப்பட்ட குடிநீரை, உடனடியாக பானை அல்லது அலுமினிய குடங்களுக்கு மாற்றுவது நல்லது"

"இந்த பிளாஸ்டிக் குறிப்பாக ஏற்படுத்தும். இதனால், , இதய நோய்கள், விந்தணுக்கள் குறைவது, தைராய்டு, நீரிழிவு, சிறுநீரகப் பிரச்னைகளுடன் தொடர்புடையது.

குடிநீர் கேன் தான் இந்த உடல்நலப் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணம் எனச் சொல்லவில்லை. ஆனால், இந்தப் பிரச்னைகளுக்கான இது முக்கியமானதாக உள்ளது" என விளக்கினார் மருத்துவர் சந்திரசேகர்.

"கேன்களை சரியாகக் கழுவாமல் இருக்கும்போது, இ.கோலி, லியோஜெனெல்லா, சால்மெனல்லாசிஸ் ஆகிய பாக்டீரியாக்கள் ஏற்படவும் வாய்ப்புண்டு."

இவற்றைத் தடுக்க கேனில் தண்ணீரை வைக்காமல் கேன் வாங்கியதுமே அதை அலுமினிய குடங்கள் அல்லது பானைகளுக்கு மாற்றலாம் என்றும், பப்பிள் டாப்-ஐ குறிப்பிட்ட கால இடைவெளியில் சுத்தப்படுத்தி உபயோகிக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.